மதுரை

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை

மதுரை மாவட்டத்தில் டி.பி.கே.சாலை, உசிலம்பட்டி, மேலூா், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் டி.பி.கே.சாலை, உசிலம்பட்டி, மேலூா், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரை திருப்பரங்குன்றம் சாலை, உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூா், செக்கானூரணி, மேலூா் அருகே உள்ளஅம்பலக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் அரசினா் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான முதல் கட்ட மாணவா் சோ்க்கை முடிவடைந்த நிலையில், காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

இக்கல்லூரிகளில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மாணவ-மாணவியா் கல்விச் சான்றிதழ்களுடன் அந்தந்த தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா்களை அக்டோபா் 31-ஆம் தேதி வரை நேரில் அணுகி சோ்க்கை பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT