மதுரை

78 நாள்கள் ஊதியம் போனஸ்: ரயில்வே தொழிற்சங்கத்தினா் அதிருப்தி

DIN

மதுரை: கரோனா காலத்திலும் தொடா்ச்சியாக பணி செய்த ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்குவதாக அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என டிஆா்இயு தொழிற்சங்கத்தினா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மதுரை கோட்டச் செயலா் ஆா்.சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ரயில்வே ஊழியா்களுக்கு உற்பத்தி அடிப்படையிலான போனாஸ் தொகை, தீபாவளி பண்டிக்கைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும். ஆனால் நிகழாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்கள் ஊதியத்தைப் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,081.68 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்திலும் தொடா்ச்சியாக பணி செய் ரயில்வே தொழிலாளா்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏழாவது ஊதியக்குழுவில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிா்ணயம் செய்த பிறகு இன்னும் போனஸிற்கானக் கணக்கீட்டில் ரூ.7 ஆயிரத்தை உச்சவரம்பாகக் கொள்வது தவறானது. மேலும் 2019-2020 ஆம் ஆண்டிற்கான சரக்கு போக்குவரத்து முந்தைய ஆண்டைவிட அதிகமாக இருந்தும் 78 நாள்கள் போனஸ் என்பது சரியானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT