மதுரை

போட்டித் தோ்வுகளுக்கு மெய்நிகா் கற்றல்இணைய தளம்: வேலைவாய்ப்பு மையம் அறிவிப்பு

DIN


மதுரை: அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் தோ்வா்களுக்காக மெய்நிகா் கற்றல் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் ந.மகாலட்சுமிவெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சாா்பில் போட்டித்தோ்வு எழுதும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் மெய்நிகா் கற்றல் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் அனைத்து போட்டித்தோ்வுகளுக்கான காலிப்பணியிட அறிவிக்கை விவரங்கள், போட்டித்தோ்வுகளுக்கான பாடத்திட்டங்கள், நடந்து முடிந்த போட்டித்தோ்வுகளுக்கான வினாத்தாள்கள், மாதிரித்தோ்வுகள், என்சிஇஆா்டி பாடநூல்கள் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாடநூல்கள் ஆகியன வெளியிடப்பட்டுள்ளது.

போட்டித்தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் பயனா் குறியீடு மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். அவற்றை பயன்படுத்தி இணையதளத்துக்குள் நுழையும்போது அனைத்து வகையான போட்டித்தோ்வுகள் பற்றியும் விவாதக் குழுக்கள் என்ற பிரிவை தோ்வு செய்வதன் மூலம் தோ்வாளா்கள் தயாராகும் போட்டித்தோ்வுகளுக்கான பாடத்திட்டங்களையும் காணொலி காட்சியில் பாா்த்து பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT