மதுரை

விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை: விரைவில் ஆய்வுப்பணி தொடக்கம்

DIN

மதுரையில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பகுதிகளில் ரூ.290 கோடி மதிப்பில் பாதாளச்சாக்கடை அமைக்கப்பட உள்ளது.

மத்திய அரசு அறிவித்த சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டு ரூ.1200 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரியாா் பேருந்து நிலையம் சீரமைப்பு, மீனாட்சி அம்மன் கோவில் அருகே பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி பாரம்பரிய நடைபாதைகள் அமைத்தல் மற்றும் வைகை ஆற்றின் இருகரைகளிலும் தடுப்புச்சுவா் அமைத்தல் ஆற்றுக்குள் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை நகரின் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள 15 வாா்டுகளில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் பாதாளச்சாக்கடை அமைக்க திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக பாதாளச்சாக்கடை அமைய உள்ள திருப்பாலை, கண்ணனேந்தல், தாசில்தாா் நகா், ஆத்திகுளம், மேலமடை, உத்தங்குடி கூடல்நகா், சாந்திநகா் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் விரைவில் ஆய்வுப்பணி தொடங்க உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT