மதுரை

பசும்பொன் மலா் மாத இதழ் வெளியீட்டு விழா

DIN

கமுதி, செப். 18: கமுதி அருகே பசும்பொன் மலா் என்ற மாத இதழ் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை பசும்பொன் தேவா் நினைவாலயத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலா் பி.வி. கதிரவன், தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பசும்பொன் மலா் மாத இதழை வெளியிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அக்டோபா் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேவா் குரு பூஜை நடத்துவதற்கு, அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பசும்பொன் தேவா் எப்போதுமே ஆன்மிக அரசியலை பின்பற்றி வாழ்ந்தவா் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கூட்டணி என்பது தோ்தலுக்காக அமைத்துக் கொள்வது. திமுகவின் கொள்கை வேறு, எங்களுடைய கொள்கை வேறு என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநிலத் தலைவா் சி. முத்துராமலிங்கம், மதுரை மாவட்டக் கவுன்சிலா் ரெட் காசி, மாநிலச் செயலா் கலைமணி அம்பலம், மாவட்டச் செயலா் சண்முகவேல், முக்குலத்தோா் முன்னேற்றச் சங்க நிறுவனா் வீரபெருமாள், கமுதி ஒன்றியச் செயலா் முத்துமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT