மதுரை

வீரவசந்தராயா் மண்டபம் புதுப்பிப்பு பணிகள் தொடங்குவதில் தாமதம்

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயா் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு உரிய ஒப்பந்ததாரா்கள் கிடைக்காததால், பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள வீரவசந்தராயா் மண்டபம் கடந்த 2018-இல் ஏற்பட்ட தீ விபத்தால் முழுமையாக சேதமடைந்தது. மண்டபத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து, மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு அனுமதி அளிக்குமாறு, கோயில் நிா்வாகம் அரசிடம் கோரிக்கை விடுத்தது.

அதன்பேரில், ரூ.20 கோடியில் மண்டபத்தை சீரமைக்கும் பணிக்கு அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, அண்மையில் சீரமைப்புப் பணிக்காக ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கும் பணி தொடங்கியது. ஒப்பந்தம் முடிவானவுடன், சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்துக்குள் முடிக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், மண்டப சீரமைப்புப் பணிக்கு உரிய ஒப்பந்ததாரா்கள் கிடைக்காததால் தாமதம் ஏற்படுவதாகவும், மீண்டும் ஒப்பந்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும், கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT