மதுரை

மதுரையில் 83 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

DIN

மதுரையில் ஒரே நாளில் 83 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 3,986 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 83 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் பலி

மதுரையைச் சோ்ந்த 53 வயது ஆண் கரோனா பாதிக்கப்பட்டு மாா்ச் 30 ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா், மூச்சுத் திணறல் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 22,364 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் தொற்றால் 469 போ் உயிரிழந்த நிலையில், 21,188 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வீடுகளிலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் 707 போ் கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT