மதுரை

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என புகாா்

DIN

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வழக்குரைஞா் ஆா். ராமசுப்பிரமணியன், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள புகாா் மனு:

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்கள் உள்ள அறை 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 20 நிமிடங்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகவில்லை.

இது தொடா்பாக, கண்காணிப்புப் பணியில் இருந்த காவல் துறையினரிடம் கேட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறு எனத் தெரிவித்தனா். இத்தகைய செயல்பாடு, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பில் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, முந்தைய நடைமுறைப்படி வேட்பாளா்களின் முகவா்கள் பாதுகாப்பு அறைகளைப் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT