மதுரை

மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளா் பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

DIN

மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளா் பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பரில் தீபாவளி பண்டிகையின்போது மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைமைப் பொறியாளா் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனடிப்படையில், விசாரணை நடைபெற்று வந்தது. தொடா்ந்து மாநகராட்சி தலைமைப் பொறியாளா் அரசு மற்றும் உதவிப் பொறியாளா் மனோகரன் ஆகிய இருவரையும் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தலைமைப் பொறியாளா் அரசு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழக அரசின் இட மாறுதல் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தாா். மேலும் இதுகுறித்து தமிழக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT