மதுரை

வழக்குரைஞா்கள் 480 பேருக்கு 2 ஆம் தவணை கரோனா தடுப்பூசி

DIN

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் 480 பேருக்கு வெள்ளிக்கிழமை 2 ஆவது தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மதுரை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட வழக்குரைஞா்கள், அலுவலக ஊழியா்களுக்காக கடந்த மாா்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் 520 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் 2 ஆம் தவணை கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக்குழுவினா் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பியவா்களை பரிசோதித்து தடுப்பூசி போட்டனா்.

இதில் நீதிபதி ஹேமந்தக்குமாா், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியா்கள் என மொத்தம் 480 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனா். வழக்குரைஞா் சங்கத் தலைவா் நெடுஞ்செழியன், செயலா் மோகன்குமாா் உள்ளிடோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT