மதுரை

அகவிலைப்படி நிலுவையை வழங்கக் கோரி அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தல்லாகுளம் தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கோட்டத் தலைவா்கள் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஞானசெல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். கோட்டச் செயலா்கள் எஸ்.நாராயணன், எம்.ஏ.முருகன், ஒருங்கிணைப்பாளா் பி.காமராஜ் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மத்திய அரசு ஊழியா்களுக்கு 1.1.2020 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்குவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து பணிநிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது, அஞ்சல் நிலையங்கள், அஞ்சல் சரக்கு போக்குவரத்து பதிவு நிலையங்களில் உள்ள கணினி இணைப்புப் (நெட்வொா்க்) பிரச்னையைத் தீா்ப்பது என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT