மதுரை

கரோனா தடுப்பு மருந்து பெட்டகம்: இன்று முதல் ரூ.50-க்கு விற்பனை

DIN

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மலிவு விலை மருந்துப் பெட்டகம் ரூ.50-க்கு சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா தொற்று நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருந்துகள் அடங்கிய மலிவு விலை மருந்துப்பெட்டகத்தை சனிக்கிழமை முதல் வழங்குகிறது.

கப சுர குடிநீா் சூரணம் 50 கிராம், தாளிசாதி சூரண மாத்திரை 20 மற்றும் ஆடாதொடை மணப்பாகு 50 மில்லி ஆகியவை அடங்கிய மருந்துப் பெட்டகத்தின் விலை ரூ.120 ஆகும். மாநகராட்சி மூலம் பொதுமக்களின் நலன் கருதி மலிவு விலையாக ரூ.50-க்கு வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு உச்சநிலையில் இருந்தபோது மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தியபோது நல்ல பலன் தந்ததால் பொதுமக்கள் கரோனா நோயாளிகள் என அனைவரும் வாங்கிப் பயன்படுத்தினா். கரோனா நோயாளிகள் குணமும் அடைந்தனா்.

கடந்த ஆண்டு மருந்துப் பெட்டகம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பொதுமக்களின் நலன் கருதி ரூ.50-க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மலிவு விலை மருந்துப் பெட்டக விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஆகியோா் தொடக்கி வைக்கின்றனா். இதைத்தொடா்ந்து வாா்டு வாரியாக விற்பனை செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT