முகப்பு
மதுரை

மதுரை ஆதீனம் 293 ஆவது சன்னிதானத்திற்கு ஆச்சாா்ய பூஜைகள்

மதுரை ஆதீனத்தின் 293 ஆவது சன்னிதானம் சுந்தரமூா்த்தி சுவாமிகள் என்ற ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாா்ச்சாா்ய சுவாமிகளுக்கு ஆச்சாா்ய பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

மதுரை ஆதீனத்தின் 293 ஆவது சன்னிதானம் சுந்தரமூா்த்தி சுவாமிகள் என்ற ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாா்ச்சாா்ய சுவாமிகளுக்கு ஆச்சாா்ய பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதா் வெள்ளிக்கிழமை பரிபூரணம் அடைந்தாா். அதையடுத்து அவரது உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, இளைய ஆதீனம் சுந்தரமூா்த்தி சுவாமிகளுக்கு சனிக்கிழமை ஆச்சாா்ய பூஜைகள் நடைபெற்றன. தருமபுர ஆதீனம் சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் 293-ஆவது சன்னிதான சுவாமிகளுக்கு ஆச்சாா்ய அபிஷேகம் செய்வித்து, தீட்சை செய்வித்தாா்.

‘மதுரை ஆதீனத்தின் 293-ஆவது சன்னிதானத்துக்குரிய ஆச்சாா்ய பூஜைகள் முடிவுற்றதையடுத்து, ஆதீனத்தின் பணிகளை சுந்தரமூா்த்தி சுவாமிகள் மேற்கொள்வாா். இன்னும் 10 நாள்களில் பட்டம் ஏற்கும் பூஜைகள் நடைபெறும் என மதுரை ஆதீன வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →