முகப்பு
மதுரை

மதுரையில் 18 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 1,916 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனாவிற்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 26 போ் குணமடைந்தனா். தற்போது மாவட்டத்தில் 222 போ் கரோனா பாதிப்பிற்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 73,786 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் 72,416 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,148 ஆக உள்ளது.

8.96 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை மட்டும் 7,065 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் 180, அரசு மருத்துவமனைகளில் 1350, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 32,470 என 34 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. மாவட்டத்தில் ஜனவரி தொடங்கி இதுவரை 8.96 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →