முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 21 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 231 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இருப்பில் 27 ஆயிரம் தடுப்பூசி: மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 7,202 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் 350, அரசு மருத்துவமனைகளில் 1050, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 25,600 என 27 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. மாவட்டத்தில் ஜனவரி தொடங்கி இதுவரை 8.90 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →