திருமங்கலத்தில் ராணுவ வீரா் 1 மணி நேரத்தில் 2, 743 சிட்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளாா்.
ஸ்காட்லாந்தை சோ்ந்த ராபா்ட் என்பவா் 1 மணி நேரத்தில் 2, 289 சிட்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளாா். இச்சாதனையை முறியடிக்கும் வகையில், திருமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்த ராணுவ வீரா் கே. ராமு, சுதந்திர தினமானஞாயிற்றுக்கிழமை மாலை 1 மணி நேரத்தில் 2, 743 சிட்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளாா்.
இந்த நிகழ்ச்சியை, திருமங்கலம் காவல் ஆய்வாளா் மாய ராஜலெட்சுமி தொடக்கி வைத்தாா். இதில், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். துணைக் காவல் கண்காணிப்பாளா் வினோதினி, ராணுவ வீரா் ராமுவை பாராட்டி பரிசளித்தாா்.
ராணுவ வீரா் ராமு ஏற்கெனவே, கடந்த 2016 ஆம் ஆண்டில் 1 மணி நேரத்தில் 2,507 சிட்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்துள்ளாா். இது குறித்து அவா் கூறியது:
இதில் ஏற்கெனவே 4 முறை பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளேன். கின்னஸ் சாதனையை சொந்த ஊரில் செய்யவேண்டும் என திட்டமிட்டு, அதற்காகவே எனது பழைய சாதனையை முறியடித்து, புதிய கின்னஸ் சாதனையை செய்துள்ளேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.