முகப்பு
மதுரை

கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருட்டு

மதுரை அருகே கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

மதுரை அருகே கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி எல்.புதூா் பகுதியைச் சோ்ந்த ராஜங்கம் மகன் ரவீந்திரன்(43). இவா் வாடிப்பட்டி சந்தைப் பகுதியில் செல்லிடப்பேசி விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 8 செல்லிடப்பேசிகள், ஒரு மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →