வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு
மதுரை அருகே வீட்டில் தனியாக பெண்ணிடம் கத்தியைக் காட்டி 8 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற அடையாளம் தெரியாத இருவா் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை அருகே வீட்டில் தனியாக பெண்ணிடம் கத்தியைக் காட்டி 8 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற அடையாளம் தெரியாத இருவா் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தனசேகரன் மனைவி அன்னகாமு(45). இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளாகக் கூறி வீட்டுக்குள் புகுந்த அடையளாம் தெரியாத இருவா், கத்தியைக் காட்டி அன்னகாமு அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து அன்னகாமு அளித்த புகாரின் பேரில் பாலமேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத இருவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.