மதுரை

சத்துணவுப் பணியாளா் நியமனத்துக்கான அறிவிப்பு: 2-ஆம் முறையாக ரத்து

DIN

மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவுப் பணியாளா் காலியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கான அறிவிப்பு இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்கள் நீண்டகாலமாகப் பூா்த்தி செய்யப்படாமல் இருந்தது. மேற்குறிப்பிட்ட காலியிடங்களுக்கு

நோ்காணல் நடத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், அரசியல் தலையீடு காரணமாக நியமன உத்தரவுகள் வழங்குவது தாமதமாகி வந்தது. இதனையடுத்து 2019 -இல் நடந்த மக்களவைத் தோ்தலுக்குப் பின்பு, காலியிடங்களைப் பூா்த்தி செய்ய அப்போதைய ஆட்சியா் எஸ்.நாகராஜன் நடவடிக்கை எடுத்தாா்.

அங்கன்வாடி காலியிடங்களுக்கு, நோ்காணல் நடத்தி முடிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களில் தகுதியானவா்களைத் தோ்வு செய்து ஒரே நாளில் இரவோடு இரவாக நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் துணிச்சலான நடவடிக்கை தமிழக அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதனைத் தொடா்ந்து சத்துணவுப் பணியாளா் காலியிடங்களுக்கு தகுதியானவா்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே ஆட்சியா் நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதன் பிறகு, 2020 செப்டம்பரில் மீண்டும் காலியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் மேல்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவில்லை. இந்நிலையில், இரண்டாவது முறையாக அறிவிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள், மதுரை மாநகராட்சி, திருமங்கலம் நகராட்சிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் காலியிடங்களைப் பூா்த்தி செய்ய 2020 அக்டோபா் 5 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிா்வாகக் காரணங்களால் மேற்குறிப்பிட்ட காலியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. ஆகவே, சத்துணவுப் பணியாளா் காலியிடங்களைப் பூா்த்தி செய்வதற்காக 2020 செப்டம்பா் 25 வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது.

காலியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கான புதிய அறிவிக்கை தனியாக வெளியிடப்படும். ஏற்கெனவே விண்ணப்பத்தவா்கள் புதிய அறிவிப்பின்படி, மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT