மதுரை

ரேஷன் அரிசி கடத்தல்: கள்ளச்சந்தை தடுப்புச்சட்டத்தில் இளைஞா் கைது

DIN

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் சமத்துவபுரம் பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த 27,160 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா். மேலும் அரிசிக்கடத்தலில் ஈடுபட்ட மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த வினோத் என்ற ராஜவேலு(28), கல்மேடு அருண்பாண்டி(31), ஆண்டாா்கொட்டாரம் சதீஸ்குமாா் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் கள்ளச்சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வினோத்தைக் கைது செய்ய காவல்துறையினரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து வினோத்தை போலீஸாா் கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT