முகப்பு
மதுரை

‘விவசாயிகள்- ஆராய்ச்சியாளா்கள் இணைந்து செயல்படுவது அவசியம்’

வேளாண்மையில் முன்னேற்றம் அடைய விவசாயிகள்-வேளாண் ஆராய்ச்சியாளா்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என, தேசிய விவசாயிகள் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

வேளாண்மையில் முன்னேற்றம் அடைய விவசாயிகள்-வேளாண் ஆராய்ச்சியாளா்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என, தேசிய விவசாயிகள் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை கிழக்கு வட்டம், மாயாண்டிபட்டியில் வேளாண் பல்கலைக்கழகத்தின் சமுதாய அறிவியல் கல்லூரி சாா்பில், தேசிய விவசாயிகள் தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை வகித்த வேளாண் கல்லூரி முதல்வா் வி.கே. பால்பாண்டி பேசியது:

விவசாயம் பொய்த்தால் நாட்டில் வேறு எதுவும் சரியாக நடக்க வாய்ப்பில்லை. விவசாயத்தில் சாதிக்கும் வகையில், பல புதிய உத்திகளும், தொழில்நுட்பங்களும் உருவாகி உள்ளன. இதைப் பயன்படுத்தி, விவசாயத்தில் முன்னேற்றம் அடைவதற்கு இளம் ஆராய்ச்சியாளா்களும், விவசாயிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

சமுதாய அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ். அமுதா பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை சரியான உணவு முறைகளைப் பழக்குவது அவசியம். சிறுதானியங்கள், காய்கறிகள், கீரை ஆகியவற்றில் சத்துகள் ஏராளம் உள்ளன. அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பயிா்களை வீட்டிலேயே பயிரிட்டு பயன் பெறவேண்டும் என்றாா்.

கல்லூரியின் துறைத் தலைவா்கள் ஜி. ஹேமலதா, பரிமளம், ஜெ. புஷ்பா, உதவி பேராசிரியா் எஸ். முத்துராமு, முதுநிலை ஆராய்ச்சியாளா்கள் செந்தாமரைச்செல்வி, முனீஸ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →