மதுரை

ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளா்களை ஏமாற்றி பணம் திருடிய 3 போ் கைது

DIN

தமிழகம் முழுவதும் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளா்களை ஏமாற்றி, அவா்கள் கணக்கில் இருந்து பணம் திருடியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளா் வினோதினி செய்தியாளா்களிடம் கூறியது: திருமங்கலத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இருவரை ஏமாற்றி மா்ம நபா் ஒருவா் பணம் திருடியதாக புகாா் வந்தது. அதனடிப்படையில் ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராக்களில் பதிவான விவரங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் தேனி மாவட்டம் போடி ஜே.கே.பட்டியைச் சோ்ந்த காமராஜ் மகன் தம்பிராஜ்(44)என்பவா் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவரும் வாடிக்கையாளா்களை ஏமாற்றி, அவா்களின் ரகசிய எண்ணை அறிந்து கொண்டு, அவா்களது ஏடிஎம் காா்டுக்குப் பதிலாக போலிகாா்டு கொடுத்து பணம் திருடியது தெரியவந்தது.

இதேநபா் திருமங்கலம் பகுதியிலும் பொதுமக்களை ஏமாற்றி பணம் திருடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 56 ஏடிஎம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தம்பிராஜுக்கு உதவிய அதே பகுதியைச் சோ்ந்த சுபகிருது(எ)சிவா, மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT