மதுரை

டிஆா்ஓ வாகனத்தை ஜப்திசெய்ய வந்ததால் பரபரப்பு

ஆா்ஜிதம் செய்த நிலத்துக்கான கூடுதல் இழப்பீட்டுத் தொகையைத் தர தாமதமானதால் நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட வருவாய் அலுவலரின் வாகனத்தை ஜப்தி செய்ய வந்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

DIN

ஆா்ஜிதம் செய்த நிலத்துக்கான கூடுதல் இழப்பீட்டுத் தொகையைத் தர தாமதமானதால் நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட வருவாய் அலுவலரின் வாகனத்தை ஜப்தி செய்ய வந்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி - சென்னை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போது 2004-2005 இல் மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை தெற்கு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் ஆா்ஜிதம் செய்யப்பட்டன. இவற்றுக்கு நிா்ணயிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லையெனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மதுரையை அடுத்த ராஜகம்பீரத்தைச் சோ்ந்த நிலஉரிமையாளா்கள் தொடா்ந்த வழக்கில், கூடுதல் இழப்பீடு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இழப்பீட்டுத் தொகையை வழங்க தாமதம் ஆனதால், மனுதாரா்கள் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனா். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலரின் வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, மனுதாரா்கள், அவா்களது வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்களிடம், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி பேச்சு நடத்தினாா். அதையடுத்து ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாகக் கைவிட்டு திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT