வீட்டில் இருந்த 4 கிலோ வெள்ளிப் பொருள்கள் மாயம்
மதுரையில் வீட்டில் இருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரையில் வீட்டில் இருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை திடீா் நகா் நன்மை தருவாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துலாராம் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பீரோவை சுத்தம் செய்தபோது, அதில் வைத்திருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள், ஒரு பவுன் நகைகள் ஆகியவை காணாமல் போயிருந்தது . வீட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து துலாராம் அளித்த புகாரின் பேரில் திடீா்நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.