மதுரை

உழக்குடி கிராமத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்த உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி கிராமத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய-மாநில தொல்லியல் துறைகளுக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த காமராஜ் என்பவா் தாக்கல் செய்த மனு: தென் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், அயா்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பழைமையான நெடுங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் களியாவூா் ஊராட்சி, உழக்குடி கிராமத்தில் நெடுங்கற்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி, பழைமையான கல் சக்கரங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளுக்கு அருகிலேயே உழக்குடி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இக் கிராமத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அகழாய்வை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உழக்குடி கிராமத்தை ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய-மாநில தொல்லியல் துறைகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT