முகப்பு
மதுரை

போலி ஆவணங்கள் மூலம் கள்ளழகா்கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை

மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் கள்ளழகா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் கள்ளழகா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான் அலாவுதீன் (33). இவரிடம் அழகா்கோயில் சாலை பொய்கரைப்பட்டியில் உள்ள நிலத்தை, தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநா் ஜெயச்சந்திரன், சிந்தாமணியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், அப்பன்திருப்பதி தினகரன் ஆகியோா் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனா்.

இந்நிலையில் சுல்தான் அலாவுதீன் வாங்கிய நிலம், அழகா்கோயிலுக்கு சொந்தமானது என்பதும், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சுல்தான் அலாவுதீன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →