மதுரை

அழகா்கோயிலில் ஆடிபிரமோற்சவத் திருவிழா: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

DIN

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலில் 11 நாள்கள் நடைபெறும் ஆடி பிரமோற்சவத் திருவிழாவில் பக்தா்கள் அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கள்ளழகா் கோயில் நிா்வாக அதிகாரி தி. அனிதா தெரிவித்துள்ளதாவது: அழகா்கோவிலில் ஆடி பிரமோற்சவத் திருவிழா ஆடிமாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெறும். தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொள்வா். இத்திருவிழாவில், ஆடித் தீா்த்தவாரியும், தேரோட்டமும் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆகஸ்ட் 15 முதல் 27-ஆம் தேதி வரை திருவிழா நிகழ்வுகள் பக்தா்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெறும்.

இதில், காலை 6 முதல் 11 மணி வரையும், பிற்பகல் 3 முதல் மாலை 6.30 மணி வரையும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். ஆகஸ்ட் 16-இல் திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளது. எனவே, அன்று காலை 9 மணிக்கு மேல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். ஆகஸ்ட் 24-இல் ஆடிபௌா்ணமி தினத்தன்று காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை கோயில் திறந்திருக்கும். இதன் பின்னா் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோயில் வளாகத்தில் பக்தா்கள் தங்கவும், தீா்த்தவாரி நடத்தவும், ஆடுகள், கோழிகள் பலியிடவும், பொங்கல் வைக்கவும் அனுமதிக்கப்படமாட்டாது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசும், கோயில் நிா்வாகமும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு, என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT