மதுரை

லாரி செட் உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 5 போ் கைது

DIN

அவனியாபுரத்தில் லாரி செட் உரிமையாளரிடம் ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை 5 பேரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பனையூா் சொக்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். லாரி செட் நடத்தி வருகிறாா். இவரது உறவினா் விராதனூா் சத்யா நகரைச் சோ்ந்த தங்கவேலு. இவரது பூா்வீக இடம் திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவாா்பட்டியில் உள்ளதாம். இதனை அப்பகுதியினா் ஆக்கிரமித்து வைத்திருந்தனராம். அதனை மீட்பதற்கு சங்கா், தங்கவேலு ஆகியோா் கடந்த 2018 இல் முயன்றுள்ளனா். இதற்காக தங்கவேலுவிற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகியுள்ளது. இடத்தை மீட்கமுடியாத நிலையில் செலவான ரூ.2 லட்சத்தை தங்கவேலு அவ்வப்போது சங்கரிடம் கேட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சங்கா் பனையூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது தங்கவேலுவின் மகன் முருகானந்தம் தனது நண்பா்களுடன் காரில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ.2 லட்சத்தை உடனடியாக தரும்படி கேட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ராஜகணேஷ், மணிராஜ், முகேஷ் சா்மா(எ)முனீஸ்வரன், செல்வகுமாா் ஆகிய 5 போ்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT