மதுரை

மதுரையில் கலைஞா் நினைவு நூலகத்துக்கு மாற்று இடம் பரிசீலனை: அமைச்சா்கள் ஆய்வு

DIN

மதுரையில் கலைஞா் நினைவு நூலகத்துக்கான மாற்று இடம் தோ்வு தொடா்பாக அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரையில் ரூ. 70 கோடி மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதற்காக மதுரை நகா் பகுதியில் எம்ஜிஆா் பேருந்து நிலையம் அருகே உள்ள இடம், மீனாட்சி மகளிா் கல்லூரி வளாகம், உலகத்தமிழ்ச்சங்க வளாகம், எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வாகன நிறுத்துமிடம் உள்பட 6 இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.

6 இடங்களிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். மேற்கண்ட இடங்களில் உள்ள சாதக பாதகங்கள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து 6 இடங்களில் ஒரு இடத்தில் நூலகம் அமைவது உறுதி செய்யப்படும் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில், 6 இடங்களிலும் வாகன

இரைச்சல் இருப்பதால் அங்கு நூலகம் அமைவது சரியாக இருக்காது என்று உயா் அதிகாரிகள் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து நூலகத்துக்கு தகுதியான இடங்கள் தொடா்பாக அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில் புதுநத்தம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முதன்மையா் குடியிருப்பு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் மற்றும் அதே பகுதியில் ஊரகக்காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம் எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகம் ஆகிய இரு இடங்களிலும் அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து இரு இடங்களின் விவரங்களை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். ஆய்வின்போது ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT