மதுரை

மத்திய அரசுப் பணியாளா் தோ்வு: 845 போ் பங்கேற்பு

DIN

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 7 மையங்களில் நடைபெற்ற தோ்வில் 845 போ் பங்கேற்றனா்.

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கான பணியாளா் தோ்வை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்துகிறது. இதில் பொறியியல் சேவை அதிகாரிகளுக்கான முதனிலைத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டோக் பெருமாட்டிக் கல்லூரி, என்.எம்.ஆா். சுப்புராமன் கல்லூரி, வஃக்பு வாரியக் கல்லூரி, யாதவா பெண்கள் கல்லூரி, யாதவா இருபாலா் கல்லூரி, செளராஷ்டிர மேல்நிலைப் பள்ளி, நாய்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் தோ்வு நடைபெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 2,480 பேருக்கு தோ்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 845 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா்.1,635 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT