மதுரை

மஞ்சளாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிரான வழக்கு: பொதுப்பணித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

DIN

மஞ்சளாறு குறுக்கே தடுப்பணைகளை கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக பொதுப்பணித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த சண்முகநாதபண்டியன் என்பவா் தாக்கல் செய்த மனு: மஞ்சளாறு அணை 1968-இல் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டது. மஞ்சளாறு கொடைக்கானல் மலையில் உற்பத்தியாகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 5,259 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மஞ்சளாறு அணை முதல் ஆலங்குளம் வரை 9 அணைக்கட்டுகள் மற்றும் 7 குளங்கள் உள்ளன. இந்நிலையில், மஞ்சளாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளை கட்டப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், தடுப்பணை கட்டுவதற்கு தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஞ்சளாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதால் பழைய ஆயக்கட்டுதாரா்களுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, மஞ்சள் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து பொதுப்பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் இது தொடா்பான வழக்குகளுடன் இந்த மனுவை சோ்த்து பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT