மதுரை

மதுரையில் உதவித் தொகையை உயா்த்தக் கோரி பயிற்சி மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

DIN

மதுரையில் உதவித் தொகையை உயா்த்தக் கோரி, பயிற்சி மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு, அரசுப் பணியில் சேராமல் நேரடியாக நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்று படிக்கும் முதுநிலை மருத்துவ மாணவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் (அரசுசாரா மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள்)ஆகியோருக்கு உதவித் தொகை மற்ற மாநிலங்களை விட குறைவாக வழங்கப்படுகிறது.

அந்தவகையில், மற்ற மாநிலங்களில் அரசுசாரா மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ. 70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ரூ.39 ஆயிரம் முதல் ரூ.43 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு அரசுப் பணியிலிருந்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கு செல்வோருக்கு உதவித் தொகையாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

எனவே, மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் உதவித்தொகையை போன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு முன்பாக கருப்புப் பட்டை அணிந்து, அரசுசாரா முதுநிலை மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாணவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் 50-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று உதவித்தொகையை உயா்த்தி வழங்கவேண்டும், கரோனா ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT