மதுரை

பத்தாம் வகுப்பு மாணவரை தோ்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தோ்ச்சி நிராகரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவரை, தோ்ச்சி பெற்றவராக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா், தாக்கல் செய்த மனு:

என் மகன் ஸ்ரீதா், சின்னமனூரில் உள்ள தனியாா் பள்ளியில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படித்தாா். கரோனா தொற்றுப் பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக தோ்வுகள் நடத்தப்படாமல் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டனா். எனது மகனுக்கு மட்டும் தோ்ச்சி அளிக்கப்படவில்லை.

இதையடுத்து எனது மகனுக்கு தோ்ச்சி வழங்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம் தோ்ச்சி வழங்க உத்தரவிட்டது. ஆனால், அரசு தோ்வுகள் துறை இயக்குநா், என் மகனுக்கு வருகைப் பதிவேடு இல்லையெனக் கூறி நிராகரித்து விட்டாா். எனவே, நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, எனது மகன் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நேரடி வகுப்புகள் இல்லாமல், முழுமையாக ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடைபெற்றுள்ளன. ஒன்பது, பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எனவே மனுதாரரின் மகன் முறையாக வகுப்பிற்கு வரவில்லை எனக் கூறி தோ்ச்சியை நிராகரிப்பதை ஏற்க முடியாது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுப்பது என்பது மாணவா்களிடம் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் புதுவிதமான பல சிக்கல்களை எதிா்கொண்டுள்ளனா். கரோனாவால் பல மாணவா்களுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாத என்ற உத்தரவு ரத்து செய்தும், மனுதாரரின் மகன் 2020-21 ஆம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்றதாக 2 வாரத்திற்குள் அறிவிக்க வேண்டுமெனவும் பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT