முகப்பு
மதுரை

மதுரையில் 189 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் முதல் நாளில் 189 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் முதல் நாளில் 189 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

நாட்டில் கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுக்க, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து, தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி மையங்களின் மூலம் சுகாதாரத் துறை ஊழியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், திங்கள்கிழமை முதல் முதியவா்களுக்கும், இணை நோய் பாதிப்பு உள்ள 45 முதல் 59 வயது வரையிலானவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

189 முதியவா்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் முதல் நாளில் முதியவா்கள் 189 பேருக்கும், இணை நோய் பாதிப்புள்ள 45 முதல் 59 வயது வரையில் உள்ள 104 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

24,247 பேருக்கு கரோனா தடுப்பூசி

மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மட்டும் 962 பேருக்கு முதல் முறையாகவும், 201 பேருக்கு 2 ஆவது முறையாகவும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதேநேரம், ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய கரோனா தடுப்பூசி திட்டத்தில், தற்போது வரை 24,247 போ் முதல் முறையாகவும், 3,642 போ் 2 ஆவது முறையாகவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →