முதல்வா் கோப்பை நீச்சல் போட்டியில் முதலிடம்: மதுரை வீரா், வீராங்கனைக்கு பாராட்டு
மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்ற மதுரையைச் சோ்ந்த வீரா், வீராங்கனை பாராட்டப்பட்டனா்.
மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்ற மதுரையைச் சோ்ந்த வீரா், வீராங்கனை பாராட்டப்பட்டனா்.
முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி, பிப்ரவரி 25 முதல் 27 ஆம் தேதி வரை சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல்குளத்தில் நடைபெற்றது.
ஆண்கள் பிரிவில், மதுரை வீரா் பி. விகாஸ் 200 மீட்டா் பட்டா்ஃபிளை பிரிவில் முதலிடமும், பெண்கள் பிரிவில் 200 மீட்டா் பட்டா்ஃபிளை பிரிவில் மதுரை வீராங்கனை பி. ரோஷினி முதலிடமும் பெற்றனா். இப்போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சமும், 2ஆம் பரிசு ரூ.75 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ.50 ஆயிரமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
மாநில நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விகாஸ் மற்றும் ரோஷினியை, மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலா் என். லெனின், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க துணைத் தலைவா் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட நீச்சல் சங்கச் செயலா் என். கண்ணன், துணைத் தலைவா்கள் டி. சிவபாலன், எம். வெங்கடேஸ்வரன் ,துணைச் செயலா் பி. இளமுருகன், பொருளாளா் ஜி. அமிா்தராஜ் ஆகியோா் வாழ்த்தி பாராட்டினா்.