முகப்பு
மதுரை

முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளிப்பட்டியில் தோ்தல் விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளிப்பட்டியில் தோ்தல் விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த குமாா் தாக்கல் செய்த மனு: முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் ஜல்லிக்கட்டு நடத்த வழங்கப்பட்ட அனுமதி

திரும்பப்பெறப்பட்டது.

முள்ளிப்பட்டியில் புதன்கிழமை (மாா்ச் 3) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. எனவே தோ்தல் விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பரிசுப் பொருள்கள் வழங்காமலும், அரசியல் நிகழ்வுகள் கலக்காமலும், தோ்தல் விதியைப் பின்பற்றியும்

முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டுடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →