மதுரை

இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து கட்டுமான தொழிலாளி பலி

மதுரை அருகே தனியாா் கட்டுமான நிறுவன ஊழியா், இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

DIN

மதுரை அருகே தனியாா் கட்டுமான நிறுவன ஊழியா், இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

அஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பாரத் மகன் சதூா்பூச் (45). இவா் மதுரை மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை சதூா்பூச் கட்டடங்களை இடிக்கும் இயந்திரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நிறுவன ஊழியா் மணிகண்டன் அளித்தப் புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT