மதுரை

தனியாா் கல்லூரியின் போலி முகநூல் பக்கங்கள்: ரூ.2 கோடி நஷ்டம் என புகாா்

DIN

மதுரை அருகே உள்ள தனியாா் கலைக் கல்லூரியின் போலி முகநூல் பக்கத்தில் இணையதள சோ்க்கை விண்ணப்பங்கள் தொடா்பான லிங்க் வெளியிடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியாா் கலைக் கல்லூரியின் தலைவா் சாஹிா்ஷா (55). இவா் முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தபோது, கல்லூரியின் முகநூல் பக்கம் போன்று போலியாக இரண்டு பக்கங்கள் இருந்துள்ளன. அந்தப் போலி பக்கங்களில் கல்லூரியில் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பங்கள் தொடா்பான லிங்க் வெளியிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்தப் போலி முகநூல் பக்கத்தால், கல்லூரிக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாஹிா்ஷா அந்த புகாரில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT