மதுரை

மதுரையில் சுற்றித்திரிந்தவா்களின் 71 வாகனங்கள் பறிமுதல்

DIN

மதுரை நகரில் செவ்வாய்க்கிழமை தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து 71 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாநகரில் திங்கள்கிழமை முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய 316 போ் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.63 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 23 போ் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.11 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்த 322 போ் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாத 45 ஆயிரத்து 345 பேரிடம் ரூ.90 லட்சத்து 69 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பொதுஇடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 433 பேரிடம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை கேத்தல்கள் மூலம் தேநீா் விற்பனை செய்தவா்கள் மீதும், தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 71 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் தான் காய்கனி, மளிகை மற்றும் இறைச்சி வாங்க வேண்டும். வேறு பகுதிகளுக்கு பொருள்கள் வாங்கச் சென்றால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT