மதுரை

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம்

DIN

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முதல்முறையா கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் விற்பனைத் துறைக்குள்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதும், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வெள்ளிக்கிழமை தேங்காய் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 7 விவசாயிகளின் 45,986 தேங்காய்களை 17 குவியல்களாக ஏலத்திற்கு வைத்தனா். மதுரை விற்பனைக் குழு செயலா் மொ்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது. இதில் 12 வியாபாரிகள் பங்கேற்று, அதிகபட்சமாக ரூ.14.09-க்கும் குறைந்த பட்சமாக ரூ. 9.21 க்கும் ஏலம் எடுத்தனா். அதற்குரிய தொகை ரூ. 4.60 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

மேலும் முதல்முறையாக ஒரு விவசாயி கொண்டு வந்திருந்த 50.680 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் 3 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக கிலோ ரூ.110-க்கு எடுத்தனா். கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலைக்கு விற்று தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT