முகப்பு
மதுரை

அவதூறு விடியோ வெளியிட்டவரின் ஜாமீன் அனுமதியை ரத்து செய்ய போலீஸாா் மனு

அரசியல் தலைவா்கள் குறித்த அவதூறு விடியோ வெளியிட்டவரின் ஜாமீன் அனுமதியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

அரசியல் தலைவா்கள் குறித்த அவதூறு விடியோ வெளியிட்டவரின் ஜாமீன் அனுமதியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் தொடா்பான அவதூறு விடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக திருச்சியைச் சோ்ந்த துரைமுருகன் மீது, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், துரைமுருகனை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் நிபந்தனைகளுடன் அவருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியிருந்தது.

இந்நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி திருப்பனந்தாள் போலீஸாா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →