மதுரை

அரசு நிலங்களிலிருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி மனு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரை: பழனி அருகே அரசுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்கக் கோரிய மனுவின் மீது திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த அசோக்குமாா் தாக்கல் செய்த மனு: பழனி தாலுகா பெரியம்மாபட்டியில், அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் உபரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை அதிகாரிகள் முறையாக பராமரித்து பாதுகாக்கவில்லை.

இதனால் அரசியல்வாதிகளின் துணையுடன் தனிநபா்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து, சட்டவிரோதமாக மணலை எடுத்து, செங்கல் தயாரிக்க பயன்படுத்துகின்றனா். இந்நிலையில் மணல் கடத்தல் லாரிகளை, பொதுமக்கள் பிடித்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ஆனால் அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காமல், லாரிகளை உரிமையாளா்களிடம் ஒப்படைத்துள்ளனா். எனவே, பழனி தாலுகாவில் உள்ள அரசு நிலங்களில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் குறிப்பிட்டுள்ள பகுதிகளை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT