வயலில் இறங்கி குறைகளைக் கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் கிராம சபைக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் இறங்கி விவசாயப் பெண்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதையும் படிக்க | கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை
அரசு சுற்றுப்பயணமாக மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அரசு மாணவர் விடுதியில் மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இந்நிலையில் மதுரை பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களைக் கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தி வயலில் இறங்கி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதையும் படிக்க | மதுரையில் காந்தியடிகள் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக குறைகளைக் கேட்டதைத் தொடர்ந்து ஆச்சரியமடைந்த விவசாயப் பெண்கள் தங்களது குறைகளை அவர்களிடம் தெரிவித்தனர்.