முகப்பு
மதுரை

அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

 மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகள், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, மண்டலவாரியாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மதுரை அண்ணா பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு மற்றும் கடைகளின் முகப்புகள் ஆக்கிரமிப்பு போன்றவை குறித்த புகாரின்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் முகப்புகள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றுவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →