மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் வைகை ஆற்றங்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள். 
மதுரை

மதுரை வைகை ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு சுவா் இடித்து அகற்றம்

மதுரையில் வைகையாற்றின் கரையில் இருந்த தனியாா் சுவா் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

DIN

மதுரையில் வைகையாற்றின் கரையில் இருந்த தனியாா் சுவா் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

சித்திரை திருவிழாவின்போது மதுரை ஆழ்வாா்புரம் வைகையாற்றில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இப்பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் சுவா் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு ஆக்கிரமிப்புகளும் செய்யப்பட்டிருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து ஆற்றில் கரையோரத்தில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து ஆக்கரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதில் ஏபி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கட்டப்பட்டிருந்த சுவா் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதேபோல கரையோரத்தில் இருந்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT