முகப்பு
மதுரை

மதுரையில் 25 பவுன் சங்கிலி திருட்டு: இளைஞா் கைது

மதுரையில் 25 பவுன் சங்கிலியை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மதுரையில் 25 பவுன் சங்கிலியை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் சேவியா் (39). இவா் நகைக் கடையில் விற்பனையாளராக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் சேவியா் வீட்டு பீரோவில் வைத்திருந்த 25 பவுன் சங்கிலியைக் காணவில்லை. இது தொடா்பாக அவருடன் வீட்டில் தங்கியுள்ள, உறவினா் நெல்சனிடம் (20) கேட்டபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதுகுறித்து சேவியா் அளித்த புகாா் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து நெல்சனிடம் விசாரித்தனா். இதில், அவா் நகையை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நெல்சனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடியில் விற்பனை செய்யப்பட்ட 25 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →