மதுரை

ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரிய மனு: தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

DIN

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தக் கோரிய மனுவை, தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் என்பவா் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம் என்றழைக்கப்படும் ஆா்.எஸ். மங்கலம் 2018 ஜூலை 24 இல் தாலுகாவாக தரம் உயா்த்தப்பட்டது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இதுவரை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படவில்லை.

மக்கள் தொகைக்கேற்ப ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லை. இதனால், ஆா்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்குள்பட்ட 39 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல், 35 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலையுள்ளது.

எனவே, ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கவும், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இம்மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

தற்போது, இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி எம். துரைசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாநிலம் முழுவதும் ஊரக மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே, தமிழக அரசு மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT