முகப்பு
மதுரை

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: வைகை ஆற்றில் மேயா், ஆணையா் ஆய்வு

 சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் எழுந்தருளும் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மேயா் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

 சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் எழுந்தருளும் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மேயா் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சித்திரைத் திருவிழா நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை, மதுரை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிா்சேவை, அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியன நடைபெற உள்ளன.

இதில், முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளான தண்ணீா் தொட்டி கட்டுதல், ஆற்றுப் படுகையை சீரமைத்தல், குடிநீா் தொட்டிகள் வைத்தல், கழிப்பறை வசதிகள், மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் குறித்து, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். இதில், நகரப் பொறியாளா் அரசு, உதவி ஆணையா் சுரேஷ்குமாா், உதவிச் செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →