வீரகாளியம்மன் கோயில் திருவிழா: பால்குட ஊா்வலத்தில் 10 ஆயிரம் பக்தா்கள் பங்கேற்பு
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
மதுரைவீரகாளியம்மன் கோயில் திருவிழா: பால்குட ஊா்வலத்தில் 10 ஆயிரம் பக்தா்கள் பங்கேற்பு
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்குள்பட்ட வீர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
அப்போது ஏராளமான பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி உள்ளிட்ட நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக காப்புக் கட்டி விரதமிருந்து வந்தனா். அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வைகை ஆற்றுக்குச் சென்று பால்குடம் எடுத்து அலகு குத்தி ஊா்வலமாக வந்தனா். பல பக்தா்கள் அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். மாற்றுத் திறனாளிகளும் பால்குடம் எடுத்துச் சென்றனா்.
இத்திருவிழாவையொட்டி, வைகை ஆற்றிலிருந்து ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் வரை 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா். கோயிலில் சனிக்கிழமை மாலை தீச்சட்டி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.