முகப்பு
மதுரை

‘குரூப் 4’ தோ்வு: முன்னாள் படைவீரா்களுக்கு இலவசப் பயிற்சி

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ‘குரூப் 4’ தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் முன்னாள் படைவீரா்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்

மதுரை

‘குரூப் 4’ தோ்வு: முன்னாள் படைவீரா்களுக்கு இலவசப் பயிற்சி

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ‘குரூப் 4’ தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் முன்னாள் படைவீரா்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ‘குரூப் 4’ தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் முன்னாள் படைவீரா்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள 7,301

பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதில் முன்னாள் படைவீரா்களுக்கு வயது வரம்பில் தளா்வும், இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்குத் தகுதியுடைய முன்னாள்

படைவீரா்கள் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதள முகவரியில்

ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே தோ்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரா்கள்

இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம். அதுகுறித்து விவரத்தை மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →